சீனாவில் இந்த வருடம் மிகவும் கொடுமையான கோடைக்காலம் நிலவுகிறது. வெப்பம் மற்றும் அனல் காற்றின் தாக்கத்தில் பலர் பரிதாபமாக பலியாகி வருகின்றனர்.
அதிகாரிகள் வந்து அவரது உடலைப் பரிசோதித்தனர். திடீரென வெப்பத்தின் தாக்கம் அதிகமாகியதால், பிணமாகப் படுத்திருந்த நபருக்கு தாகம் அதிகரித்தது.
தண்ணீர் குடிக்காவிட்டால் உயிரே போய் விடும் நிலையில் இருந்த அவர், உயிரைக் காத்துக் கொள்ள உடனடியாக அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து நீர் அருந்தினார்.
இறந்து கிடந்த பிணமொன்று திடீரென எழுந்து தண்ணீர் அருந்துவதைக் கண்ட அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தனது சாயம் வெளுத்துப் போனதால் தப்பி ஓட முயன்ற அந்நபரை பொலிசார் விரட்டிச் சென்று கைது செய்தனர்.
மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.